Home இலங்கைபுதிய காவற்துறை மா அதிபராக, தேசபந்து தென்னகோன் பதவியேற்றார்!

புதிய காவற்துறை மா அதிபராக, தேசபந்து தென்னகோன் பதவியேற்றார்!

by admin

புதிய காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். காவற்துறை தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையின் 36வது காவற்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

முன்னாள் காவற்துறை  மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் காவற்துறை  மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்படி, அவர் இதுவரை அந்த பதவியை ஆற்றி வந்தார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை  காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகராக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More