தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பணியாளர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என நம்பப்படுகிறது.