ரஸ்யாவில் இசைக்கச்சேரி இடம்பெற்ற அரங்கில் புகுந்த இனந் தொியாத நபா்கள் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. நேற்றிரவு ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் நடத்திய நிகழ்ச்சியிலேயே இனந் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தொிவித்துள்ளது.
சம்பவத்தையடுத்து கச்சேரி நடந்த கட்டிடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். இரவு முழுவதும் இடம்பெற்ற மீட்புபணிகளில் 100 பேர் கட்டிடத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.