Home இலங்கையாழ் மத்திய பேருந்து நிலைய நெருக்கடியை நீக்க நடவடிக்கை!

யாழ் மத்திய பேருந்து நிலைய நெருக்கடியை நீக்க நடவடிக்கை!

by admin

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

பேருந்து நிலையத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை (03.04.24)  நேரடி விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன் துறைசார் அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடியிருந்தார் .

இதன் தொடர்ச்சியாக இரவு, தனது அலுவலகத்தில் துறைசார் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினருடன் நடத்திய கலந்துரையாடலில் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை யாழ். மாநகர ஆணையாளர் உடனடியாக மேற்கொள்ளும்படியும், பயணிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளுக்கும் எவ்வித இடையூறுகளுமற்ற வகையில் சீர்திருத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் முகாமையாளருக்கு பணிப்புரை வழங்கியதுடன் குறித்த நடவடிக்கைகள் யாவும் கூடிய விரைவில் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More