278
யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஜோன் திரவியம் குமரசேன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூளை காய்ச்சல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love