265
சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என சாவகச்சேரி காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக நேற்றைய தினம் சனிக்கிழமை வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார்.
மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love