யாழ்ப்பாணத்தில சட்டவிரோத கொள்கலன் ஒன்று காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.
அதன்போது குறித்த கட்டடத்தில் இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 21 மாடுகள் மற்றும் 04 ஆடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சி மற்றும் இறைச்சியாக்க பயன்படுத்திய கோடாரி , கத்திகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்பபாணத்தில் பல இடங்களில் ஆடு , மாடுகள் கடத்தப்படுவதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ள நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட ஆடுகள், மாடுகள் களவாடப்பட்டவையா, என காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.