Home இலங்கை யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது!

யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (21.05.24) அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்க்ள என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  காவற்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரையும் காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More