171
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்டவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.
குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருடப்பட்ட பணமும், குறடு, கம்பி, போலி திறப்புக்கள் உள்ளிட்ட சில பொருட்களும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love