Home உலகம்கறுப்பு பட்டியலில் இஸ்ரேல் சேர்க்கப்பட்டது!

கறுப்பு பட்டியலில் இஸ்ரேல் சேர்க்கப்பட்டது!

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பிற்கு ஐநா கண்டனம்!

by admin

பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், போரில் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியமைக்காக  இஸ்ரேலை கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

மோதலில் குழந்தைகளின் உரிமைகளை மீறுபவர்களின் “அவமானப் பட்டியலில்” இஸ்ரேலை சேர்த்தமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் நடவடிக்கை நியாயமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கறுப்பு பட்டியலில் சேர்த்திருக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் குறிப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேவேளை ஹமாஸின் அபத்தமான கூற்றுக்களை ஏற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை  இஸரேலை  வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது  என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வெட்கக்கேடான தீர்மானத்தால் தான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளதாக  இஸ்ரேலுக்கான ஐக்கிய நாடுகள் சபையிக் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போர் நிறுத்தம்,  பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் ஹமாஸ் அமைப்பு இதுவரையில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை என கட்டார் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More