217
எந்தேரமுல்ல புகையிரதக் கடவையில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (08) காலை 6 மணியளவில் பதுளையிருந்து கோட்டை நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்துடனேயே இவ்வாறு கார் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தில் 54 வயதான ஆண் ஒருவரும் 34 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் சடலங்கள்
ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளனா்.
Spread the love