202
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
அதில் குறித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love