203
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் காவல்துறைப்பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது இன்று (21)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு வருகை தந்தவர்களின் வாகனம் ஒன்றே இவ்வாறு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவா்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவா்களில் 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என தெரிய வருகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love