Home இலங்கைகண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு? தகவலை அடுத்து பதட்டம்!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு? தகவலை அடுத்து பதட்டம்!

by admin

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவற்துறை  அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) கிடைத்த தகவலுக்கு அமைய நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, அங்குள்ள மக்களை வெளியேற்றி விரிவான சோதனையில் ஈடுபடவுள்ளதாக காவற்துறைனர் தெரிவிக்கின்றனர்.

இன்று  (02.07.24) காலை 10.00 மணியளவில் இந்த தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து காவற்துறையினர் உடனடியாக விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரை அழைத்து சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொலைபேசி அழைப்பு யாரேனும் ஒருவரின் போலி தொலைபேசி அழைப்பு எனத் தெரியவந்தால், அளிக்கப்பட்ட தொலைபேசி எண் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று  காவல்துறை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More