இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவின் பின்னர் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 131 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்களில் 108 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
போலோ பாபா என்ற சாமியாரின் பிரசங்க நிகழ்ச்சிக்காக திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பிரசங்க நிகழ்ச்சி முடிந்த பின்னர் போலோ பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்த போது கடுமையான நெரிசல் ஏற்பட்டு இந்த அனா்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
131 பேரை பலி கொண்ட இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி எற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.