Home உலகம் யூரோ கிண்ணத்தை, நான்காவது முறையாக ஸ்பெயின் வென்றது!

யூரோ கிண்ணத்தை, நான்காவது முறையாக ஸ்பெயின் வென்றது!

by admin

ஸ்பெயின்(Spain) மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கிண்ண கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடரானது, நேற்றுடன் (14.07.24) முடிவுக்கு வந்துள்ளது.

24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரிலிருந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன. இறுதிப்போட்டியானது பெர்லின் நகரில் நடைபெற்றது.

முதல் பாதி கோல்கள் இல்லாமல் முடிந்த நிலையில் இரண்டாம் பாதியின் 47வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கோல் கிடைத்தது.

நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) கோல் அடிக்க அதற்கடுத்த 73வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோலே பால்மர் (Cole Palmer) the edge of the boxயில் உதைத்த பந்து கோலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் (Mikel Oyarzabal) அடித்த கோல், அந்த அணியின் வெற்றி கோலாக மாறியது.

கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து கோல் அடிக்காததால், இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More