வடக்கு மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றாமல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பில் நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வந்துள்ளோம்.
கடந்த ஜனாதிபதிகளினதும் கவனத்துக்கு இவ்விடயத்தை எடுத்துச் சென்றிருந்தோம். அதன் தொடர்ச்சியாக புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் கவனத்துக்கும் இவ்விடயத்தை எடுத்துச் செல்கிறேன்.
இவ் விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தனது பாராளுமன்ற உரையின் போது, இந்திய மீனவர்களின் அத்துமீறலால் உள்ளூர் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கடுமையாக பாதிக்கிறது, குறிப்பாக வட மாகாணத்தில், இத்தகைய ஊடுருவல்களால் கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன.
பாகிஸ்தானின் அணுவாயுதங்களுக்கு பயந்து இந்திய மீனவர்கள் பாக்கிஸ்தான் கடற்பரப்புகளுக்குள் செல்வதில்லை. அங்கு சண்டித்தனம் காட்டுவதில்லை. ஆனால் இலங்கையோடு மட்டும் சண்டித்தனம் காட்டுகின்றனர் என உரையாற்றியிருந்தார்.
ஆகவே இலங்கையின் கடல்சார் இறையாண்மையை பாதுகாப்பதிலும் கடல் வளங்களை ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பது தொடர்பிலும் தங்களது கட்சி கொள்கை ரீதியில் உடன்பட்டிருப்பதால், இந்த விடயத்தில் உங்கள் உடனடி கவனத்தை செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.