ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையான நாமல் ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இம்முறை தேர்தலில் முன்னிலையாகாமலிருக்க தீர்மானித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது தேசியப் பட்டியிலில் நாடாளுமன்றத்தில் முன்னிலையாக தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக்கவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், கட்சி என்ற வகையில் தீர்மானமிக்கது என்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை ஒரு மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தக் கூடாது என கட்சியின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.