W.M.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 355 கோடி ரூபா பெறுமதிசேர் வரியை (VAT) செலுத்தத் தவறியமைக்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதிசேர் வரியை செலுத்த உத்தரவிடுமாறு கோரி உள்நாட்டு இறைவரி ஆணையாளர் தாக்கல் செய்திருந்த வழக்குக்கமைய 2023 ஒக்டோபர் 14ஆம் திகதி குறித்த வரியினை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும்,அதெனை செலுத்தாத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் அலோசியஸ், அந்தனி ரன்தேவ் தினேன்ந்ர ஜோன், கே.பிரசன்ன குமாரசிறி டி சில்வா ஆகிய பிரதிவாதிகளுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.