804
நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் காவல்துறைப் பாதுகாப்புடன் பேருந்துக்களில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட படகுகளில் தீவக பகுதிக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன.
நாளைய தினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும், நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் விசேட படகுகளில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, பேருந்துக்களில் வாக்கெண்ணும் நிலையமான மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்படும்.
நெடுந்தீவில் இருந்து வாக்கு பெட்டி விமானப்படையினரின் உலங்கு வானுர்தியில் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்படும்.
Spread the love