117
தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரது தேவைகளுக்காக இராணுவத்தினரால் சட்டவிரோமாகக் கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த ஒன்றரை வருடங்களாக பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாளைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது.
காணி உரிமையாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love