Home இலங்கையாழில். பரவும் மர்மக் காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு

யாழில். பரவும் மர்மக் காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு

by admin
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கரவெட்டி – தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும் , இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ,பரிசோதனை முடிவிலையே எலி காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு எட்டாக அதிகரித்துள்ளது.
 இதுவரையில் உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More