கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பின்னரான சுமார் ஐந்து வருடங்களின் பின்னா் சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. Human metapneumovirus (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் பரவலாக பரவி உள்ளதாகவும், தொற்றுக்குள்ளானவா்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் உள்ளடங்குவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் இன்ஃபுளுவென்சா வைரஸூம் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அங்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது