Home இலங்கைஇந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து சிகிச்சையில்

இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து சிகிச்சையில்

by admin

 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய கடற்தொழிலாளர்களில் 11 தொழிலாளர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காங்கேசன்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பினுள் படகொன்றினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்ய படகினுள் ஏறிய கடற்படையினருடன் படகில் தப்பி செல்ல முற்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களின் படகின் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படகில் இருந்த 13 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 13 பேரில் இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் , அவர்கள் இருவரையும் காங்கேசன்துறை காவல்துறையினர் ஊடாக யாழ் . போதனா வைத்தியசாலையில் கடற்படையினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஏனைய 11 கடற்தொழிலாளர்களையும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் 11 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது
அதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரு கடற்தொழிலாளிகளும் யாழ் . போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More