Home இலங்கைஇந்தியாவிலிருந்து   சட்டவிரோதமாக  கொண்டு வரப்பட்ட   விலங்குகள்  – மருந்துகளுடன் மூவர்   கைது.

இந்தியாவிலிருந்து   சட்டவிரோதமாக  கொண்டு வரப்பட்ட   விலங்குகள்  – மருந்துகளுடன் மூவர்   கைது.

by admin

சட்ட   விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து  படகு மூலம் தலைமன்னார்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள்,விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும்  காவல்துறையினரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை(4) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது , சட்ட விரோதமான முறையில்  கொண்டு வரப்பட்ட  220  புறாக்கள் (PIGIONS) , 20  ஆப்பிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS),08  பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) ,  30 மருந்து மாத்திரைகள், மருந்து திரவங்கள் அடங்கிய 40 போத்தல்களுடன்  சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பில் வசிக்கும்’ 25 மற்றும் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.  மீட்கப்பட்ட  விலங்குகள், லொறி மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார்  காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More