386
மின்னுவங்கொடவில் இன்று (26/02/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்தண்டுவன சந்திக்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உந்துருளியில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Spread the love

