128
பத்தேகம, எத்கந்துர பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். மோதலின் போது சகோதரர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பத்தேகம, எத்கந்துரவில் உள்ள மத்தேவில பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 36 வயதுடைய சகோதரர் இருவரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் காலி மற்றும் எல்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்ய பத்தேகம காவல்துறையினா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
Spread the love