இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாதாள உலக நடவடிக்கைகள் நாட்டில் முற்றாக ஒழிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கு காவல்துறையினருக்குச் சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது.
அண்மைய நாட்களில் வெளிநாட்டில் இருந்த 19 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை தீவிரமடைவதால், குற்றவாளிகள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்று காவல்துறைடினர் கருதுகின்றனர்.