Home இலங்கையாழ் . பல்கலை முன் போராட்டம்

யாழ் . பல்கலை முன் போராட்டம்

by admin

 

நாடாளாவியரீதியில் அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More