Home இலங்கை3 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுடன் இளைஞன் கைது

3 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுடன் இளைஞன் கைது

by admin

 

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுடன் உலாவி திரிவதாக அச்சுவேலி  காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைகாவல்துறையினர் இளைஞனை கைது செய்தனர்.
அதன் போது இளைஞனிடம் இருந்த பையில் இருந்து 160 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளை  மீட்டுள்ள  காவல்துறையினா் அவற்றின் பெறுமதி சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என  தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More