Home இலங்கை யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (29.03.25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய சிவராசா பிரவீன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதிலையே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் , விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More