Home இலங்கை சைவநாதம் 12 – மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து  கோரல்!

சைவநாதம் 12 – மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து  கோரல்!

by admin

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால்  2025 யூன் மாதம் 1 ஆம் திகதி  நடத்தப்படவுள்ள  சைவப்புலவர் பட்டமளிப்பு மற்றும்  சைவ மாநாட்டில் வெளியிடப்படவுள்ள சைவநாதம் – 12 மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து  கோரப்படுகின்றது என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

அனுப்ப வேண்டிய ஆக்கங்கள் இளஞ்சைவப்புலவர் , சைவப்புலவர் பாடத்திட்டத்திற்கு உட்பட்டதாக இதுவரையில்  சைவநாதம் மலரில்  வெளிவராத கட்டுரைகளாக அமைதல் வேண்டும்.

கட்டுரைகள் அச்சுப்பதிப்பு  4   பக்கங்களுக்கு மேற்படாதவாறு  மென் பிரதியாக [email protected] மின்னஞ்சலுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

பிந்திய கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது  என அறிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More