Home இலங்கை வைத்தியரின் பணத்தை திருடியவருக்கு பிணை

வைத்தியரின் பணத்தை திருடியவருக்கு பிணை

by admin
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் , யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் வைத்தியரால் முறைப்படு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர்  வைத்தியசாலை பணியாளர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து , விசாரணைகளின் பின்னர் , யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.  நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் , சந்தேகநபரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
அதேவேளை , யாழ் . போதனா வைத்திசாலையில் தொலைபேசிகள் , பணம் என்பவை களவு போகும் சந்தர்ப்பங்கள் காணப்படும் நிலையில், வைத்தியசாலைக்கு வருவோர் பெறுமதியான உடமைகளை தம்முடன் எடுத்து வர வேண்டாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More