Home இலங்கை5வது தவணைக் கடனை விடுவிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

5வது தவணைக் கடனை விடுவிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

by admin

 

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.  தனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.

தமது அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு விடயங்களை ஆராய்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளை   பாராட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம்  கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளமையினால் 5ஆம் தவணையை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More