குடவெல்ல – மாவெல்ல வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளாா். தெற்கு குடவெல்லவைச் சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவனே, குடவெல்ல வாலுகாராமயவிற்கு முன்பாக நடந்த இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், நகுலுகமுவ கல்லூரியின் 13 ஆம் ஆண்டு மாணவன் ஆவார். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மாணவர் வீதியின் நடுவில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தததனால் உயிாிந்ததாக காவல்துறையினர் தொிவித்துள்ளனா்.
அவர் இன்னும் ஒரு மாதத்தில் கல்வி கற்பதற்காக ஐக்கிய இராச்சியத்திற்குச் செல்லத் தயாராகி வந்ததாக தொிவிக்கப்படுகின்றது,

