Home இந்தியா‘ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்’ 

‘ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்’ 

by admin

பட மூலாதாரம்,ANI

“ஜம்மு, பதான்கோட் மற்றும் ரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மே 8 (வியாழக்கிழமை) இரவு இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.உதம்பூ

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் தற்போது இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது, அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்திய அரசு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

இந்திய ராணுவத்தின் கூற்றுப்படி, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல் - மின்சாரம் துண்டிப்பு, ஒலித்த சைரன்கள்

பட மூலாதாரம்,Getty Images

நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஜம்மு விமான நிலையத்தின் அருகே வெடிபொருட்களின் 16 சிதறல்களைப் பார்த்தாக பிபிசியிடம் கூறினார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், சைரன் சத்தம் கேட்பதாகவும் அங்கிருந்த மக்கள் கூறுகின்றனர்.

கத்துவாவில் உள்ள மக்கள் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்களைக் கேட்டுள்ளனர். மேலும் இங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கத்துவா ஜம்முவிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் உள்ளது. தற்போது, ​​இரண்டு நகரங்களும் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, தங்களது எக்ஸ் தள பக்கத்தில், “பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்தடையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து வெளிப்புற விளக்குகளையும் அணைத்துவிட்டு, எந்த வெளிச்சமும் வெளியே செல்லாதபடி ஜன்னல்களை மூடி வைக்கவும்.” என்று எச்சரித்துள்ளது.

ராஜௌரியில் தற்போதைய நிலைமை என்ன?

ரஜோரியில் தற்போதைய நிலைமை என்ன?

பட மூலாதாரம்,ANI

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் தற்போது இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

பூஞ்சிலும் முழுமையான மின் தடை ஏற்பட்டுள்ளது, தாக்குதல் சைரன்கள் அங்கே ஒலித்தன.

பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா கூறுகையில், ” ஜம்மு நகரத்திலும் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இரவு 8:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்,” என்றார்.

மேலும், “அதன் பிறகு முழுப் பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை மட்டுமே உள்ளது. உள்ளூர்வாசிகள் மின்வெட்டுக்கு மத்தியில் வானத்தில் சிறிய விளக்குகள் தெரியும் சில காணொளிகளை அனுப்பியுள்ளனர், இதன் காரணமாக இவை டிரோன்களாக இருக்கலாம் என்று அவர்கள் யூகிக்கின்றனர்” என்று அவர் கூறினார்.

இந்த நேரத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது, மேலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என திவ்யா ஆர்யா கூறுகிறார்.

பிபிசி பேசிய ஜம்மு நகரவாசிகளிடையே மிகுந்த பீதியும் பயமும் இருந்தது, இது சர்வதேச எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு நகர்ப்புறப் பகுதி. இவ்வளவு பெரிய அளவிலான குண்டுவெடிப்புகள் இங்கு இதுவரை நிகழ்ந்ததில்லை.

‘நாங்கள் தாக்கவில்லை’- பாகிஸ்தான் மறுப்பு

ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

“நாங்கள் இதை மறுக்கிறோம், இதுவரை எந்தத் தாக்குதலையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை” என்று பிபிசியிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறினார்.

அவரது கூற்றுப்படி, “பாகிஸ்தான் தாக்கும்போது, ​​அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தாக்கிவிட்டு பின்னர் மறுக்க மாட்டோம்”.

ஜம்மு காஷ்மீரில் வெடிப்புகள் மற்றும் மின் தடை பற்றிய செய்திகள் வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் பிபிசியிடம் பேசினார்.

பாடசாலைகள் மூடல்.

ஜம்மு காஷ்மீரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என்று ஜம்மு காஷ்மீர் கல்வி அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி நிறுத்தம்

இதற்கிடையில், தர்மசாலாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கிரிக்இன்ஃபோ வலைத்தளத்தின்படி, ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

“குறிப்பிடத்தக்க தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்ததாக ESPN வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

பார்வையாளர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காட்சிகளை ஸ்போர்ட்ஸ்டாரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட காணொளி காட்டுகிறது.

இதற்கிடையே பஞ்சாப் மற்றும் டெல்லி ஐபிஎல் அணி வீரர்களை ஏற்றிச்செல்லும் சிறப்பு ரயில் நாளை பதான்கோட்டில் இருந்து டெல்லி செல்லும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேரம் மற்றும் வழித்தடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நன்றி – BBC Tamil

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More