Home இலங்கையாழில் பாலகன் ஒருவனும் பிறந்து ஏழு நாட்களேயான குழந்தையும் உயிாிழப்பு

யாழில் பாலகன் ஒருவனும் பிறந்து ஏழு நாட்களேயான குழந்தையும் உயிாிழப்பு

by admin
யாழில் திடீர் சுகவீனம் காரணமாக பாலகன் ஒருவன் உயிரிழந்துள்ளார். துன்னாலை பகுதியை சேர்ந்த வி.சுயாந் (வயது 03) என்ற பாலகனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி வயிற்றோட்டம் காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 04ஆம் திகதி வயிற்று வலி ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறப்புக்கான கரணம் தெரியாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை . பிறந்து ஏழு நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றும உயிரிழந்துள்ளது.  நீர்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.  அதில் ஒரு குழந்தை நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More