Home இலங்கைஉழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

by admin
யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அராலி மேற்கு , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்தை இயக்கிய நிலையில் , உழவு இயந்திரத்தின் கீழ் பகுதியில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளை , உழவு இயந்திரம் திடீரென இயங்கியமையால் , அதனுள் விழுந்த போது உழவு இயந்திரம் அவர் மேல் ஏறியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More