220




மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்து அருள்பாலித்து வரும் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தின் முதலாவது தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை ஆரம்பமாகியது சிறப்பாக நடைபெற்றது.
அம்பாரவேல் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் சந்திரலிங்கம் விமலச்சந்திரன் ஒழுங்கமைப்பில் இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் சர்வபோதகம் சிவ ஸ்ரீ சிதம்பரேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதுவரை காலமும் அலங்கார உற்சவமாக நடைபெற்று வந்த திருவிழாக்கள் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் மகோற்சவத் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. அதற்கமைய அம்பாரவேல் பிள்ளையார் ஆலயத்தின் முதலாவது தேர் திருவிழா யானை ஊர்வலத்துடன் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது





Spread the love