172

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.குறித்த நடவடிக்கையின் போது 218 கிலோ, 800 கிராம் கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் ஆளில்லாத கண்ணாடி இழை படகு ஒன்று கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது


Spread the love