Home இலங்கை ஓமந்தையில் விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி!

 ஓமந்தையில் விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி பலி!

உயிரழந்தவர் யாழ் பல்கலை விரிவுரையாளரின் கணவர்!

by admin

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வண்டியுடன்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை (26.05.25) 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற  இந்த விபத்தில்  காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர்,  தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க  யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) என தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில், சம்பவம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More