Home இலங்கைACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு!

ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு!

by admin

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள்  பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (25.05.25) இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த  அவர்,

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்நதோம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும் பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளாம்.

வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானித்துள்ளோம்.

இரண்டு முறை தமிழரசுக் கட்சியுடன் இது டெர்பில் பேசியுள்ளோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடனும் பேசியுள்ளோம். அந்த அடிப்படையை வைத்து தான் பேசினோம்.

தமிழ் கட்சிகளுடன் தான் நாம் பேசியுள்ளோம். ஏனைய தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் இல்லை, ஆனால் ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அது அந்த கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More