Home இலங்கைகெஹெல்பத்தர பத்மே’வுக்கு, மூன்று போலி கடவுச்சீட்டுகள் – அதிகாரி கைது!

கெஹெல்பத்தர பத்மே’வுக்கு, மூன்று போலி கடவுச்சீட்டுகள் – அதிகாரி கைது!

by admin

பாதாள உலகக் குற்றவாளியான மன்தினு பத்மசிறி எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’வுக்கு மூன்று போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு  குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவுத் திணைக்கள அதிகாரி இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் கொழும்பில் உள்ள நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ‘கெஹல்பத்தர பத்மே’வுக்கு பாஸ்போர்ட்டுகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

துபாயில் இருக்கும் ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவருக்காக போலி பாஸ்போர்ட் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடாத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More