Home இலங்கைகுருந்தூர்மலை விவசாயிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவு

குருந்தூர்மலை விவசாயிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவு

by admin

 

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  விவசாயிகள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது

இந்நிலையில் குறித்த வழக்கு  இன்று வியாழக்கிழமை (05)  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது   விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது

முல்லைத்தீவு  மாவட்ட  நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடுனர்கள் சார்பில் முல்லைத்தீவு  காவல்துறையினா்  , தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணி ஒருவா் ஆகியோா் முன்னிலையாகியிருந்த அதேவேளை     விவசாயிகள்  சார்பாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த 12க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்

நீதிபதி தனது கட்டளையில்    குறித்த விவசாயிகள் மீதான  வழக்கை தொடர்ந்து நடத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பிரதேசம் என  வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை எனவும் தொிவித்தனை   வழக்குத்தொடுனர் தரப்பு  ஏற்றுக்கொண்டதை விசேடமாகக் குறிப்பிட்டு இருவரையும் விடுவித்ததோடு வழக்கையும்  தள்ளுபடி செய்ததுது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More