Home இலங்கைபரிசீலித்தே முடிவெடுப்போம்

பரிசீலித்தே முடிவெடுப்போம்

by admin

அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கையை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கவுள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே டக்களஸ் இதனைத் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு  சென்றிருந்த  திரு. சிவஞானம் அவர்கள், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More