Home இலங்கைவடக்கில் கைப்பற்றப்பட்ட நகைகளை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்

வடக்கில் கைப்பற்றப்பட்ட நகைகளை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்

by admin

 

யுத்த காலத்தில் வடக்கில்  இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட  தங்க நகைகளுக்கான ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு  அவை  வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளாா்.

மேலும் ஆவணங்கள் மூவம்    உறுதிப்படுத்தாவிடின்  அந்த நகைகளின் ஒரு தொகை  வடக்கின் பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும்  அதற்கு பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவா்  தெரிவித்துள்ளாா். .

யுத்த காலத்தில் வடக்கு மாகாணத்தில்  இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட  தங்க நகைகள்  ஜனாதிபதியின் பணிப்பின் போில்   சட்ட நடவடிக்கைகள் ஊடாக  காவல்திணைக்களத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க நகைகள்  இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகும். அறிக்கை கிடைத்ததன் பின்னர், அவற்றை  உரியவர்களிடம்  ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

வடக்கு அபிவிருத்திக்காக  இந்த தங்க நகைகளின் ஒரு தொகையையும், அரசாங்கத்தால் ஒரு தொகையும் வைப்பிலிடப்படும் எனவும்  வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் பங்குப்பற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More