99.3 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச வங்கியொன்றின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றன. .
சம்பந்தப்பட்ட வங்கியின் அடகு சேவைப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 கரட் தங்கம் போல் போலி தங்க நகைகளை அடகு வைத்து பணத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினா் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனா். அத்துடன் இந்த மோசடியில் தொடர்புடைய பல வங்கி அதிகாரிகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

