Home இலங்கைசெம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அணையா விளக்குப் போராட்டம் ஆரம்பம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அணையா விளக்குப் போராட்டம் ஆரம்பம்!

by admin

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “அணையா விளக்கு” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் காலை 10.00 மணிக்கு அணையா விளக்கு  ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றது.

மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்டமானது நாளை மறுதினம் புதன்கிழமை (25.06.25) வரையிலான மூன்று தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More