Home இலங்கைசிறையிலிருந்து பிள்ளையான்  அனுப்பிய கடிதம் தொடா்பில் விசாரணை

சிறையிலிருந்து பிள்ளையான்  அனுப்பிய கடிதம் தொடா்பில் விசாரணை

by admin

 

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான்  அனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம்   புற்றப்புலனாய்வுத் துறையினா்   நேற்று முன்தினம்  (07) விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 6ம் திகதி   கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்   தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் கடந்த 30 ம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு மாநகர முதல்வருக்கு  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக என தலைப்பிடப்பட்டு அதில் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை கட்சி உறுப்பினர்  ஒருவர்  ஊடாக மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழலில், அவரால் கடிதம் ஒன்று அனுப்பட்டதாக   சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மாநகரசபைக்கு சென்று, மாநகரசபை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More