Home இலங்கைஇணையவழி பாலியல் துஷ்பிரயோகம் இலங்கையில் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு!

இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் இலங்கையில் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு!

by admin

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி காவற்துறை  அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More